மைவியில் பெண் மாணவி; மாட்டிக்கொண்ட மாணவர்!
- Shan Siva
- 02 Dec, 2025
கோத்தா பாரு, டிச 2: திங்கள்கிழமை மதியம் ஜெலியில் வழக்கமான ரோந்து சோதனையின் போது, போலீசாருக்கு இடையூறு விளைவித்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக இளங்கலை
மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பிற்பகல் 3.30 மணியளவில், கம்போங் சுங்கை ருவாலில் சாலையோரத்தில் சந்தேகத்திற்கிடமான
பெரோடுவா மைவியை அதிகாரிகள் கண்டபோது, இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஜெலி மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் கமருல்சமான் ஹருன் தெரிவித்தார்.
ரோந்துப் பிரிவு
சோதனைக்காக நிறுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியபோது, வாகனத்தை வேகமாகச் செலுத்தி ஒத்துழைக்க மறுத்துவிட்டதால், போலீசார்
துரத்திச் சென்று, இறுதியாக
ஜெலியின் கம்போங் ரப்பனாவில் தடுத்து நிறுத்தினர்.
காரை ஆய்வு
செய்ததில், வாகனத்திற்குள்
ஒரு பதின்ம வயது பெண் மாணவியும் இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து தொடர்விசாரனை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



