பிக்கப் வாகனத்தை நசுக்கிய சிமெண்ட் லாரி! முதியவர் மரணம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 10: சரவாக் மாநிலத்தின் சிபுவில் உள்ள ஜாலான் டெஷோன் சாலையில் இன்று நடந்த சாலை விபத்தில், சிமெண்ட் லாரி ஒன்று பிக்கப் வாகனத்தை நசுக்கியதில் 60 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

சிபு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் ஆண்டி அலி, மதிய நேரத்தில், எஸ்எம்கே ரோஸ்லி தோபி பள்ளி அருகே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், சுங்கை மேரா தீயணைப்பு நிலையத்திலிருந்து எட்டு தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சிக்கியிருந்த பாதிக்கப்பட்டவரை ஏர்பேக் கருவிகளைப் பயன்படுத்தி மீட்க தீயணைப்பாளர்கள் முதலில் முயன்றனர். ஆனால் அது வெற்றியளிக்கவில்லை  என்று ஆண்டி கூறினார். பின்னர் இரண்டு கிரேன்களின் உதவியுடன் அவரை மீட்டதாகவும், சம்பவ இடத்திலேயே சுகாதார அமைச்சின் மருத்துவ பணியாளர்கள் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

இதனிடையே, சிபு காவல் துறைத் தலைவர் சுல்கிப்லி சுஹைலி, 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1) ன் கீழ், கவனக்குறைவான அல்லது ஆபத்தான வாகன ஓட்டத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *