காவல்நிலையத்தைத் தாக்க முயன்ற 4 இளைஞர்கள் கைது!

top-news

பிப்ரவரி 20,

காவல்நிலையத்தின் வாசலில் நின்று காவல் அதிகாரியுடன் ஆடவர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடும்படியானக் காணொலி சமூக வலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட 4 இளைஞர்களைக் கைது செய்துள்ளதாகக் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார். நெற்று மாலை 4.40 மணியளவில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து சம்மந்தப்பட்ட 4 இளைஞர்களையும் இரவு 7.40 மணிக்குக் கைது செய்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 23 வயது உள்ளூர் ஆடவர்கள் என்றும் Tan Seng Lee தெரிவித்தார். 

முன்னதாகச் சமூக வலைத்தலத்தில் பரவிய காணொலியில் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் காவல்நிலையத்தின் வாசலில் நின்று காவல் அதிகாரியை நோக்கி ‘நீ சட்டையைக் கழட்டு, உன்னிடம் சட்டை இருக்கு என்பதால் நீ சொல்வதைக் கேட்க முடியாது, என்னிடம் பணம் இல்லை, உன்னால் முடிந்ததைச் செய்’ என்று மிரட்டும்படியாக அமைந்ததுள்ளது. 

கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காணொலியின் அடிப்படையில் எந்தவோர் ஊகங்களையும் பொதுவில் பகிர வேண்டாம் என்றும் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee வலியுறுத்தினார். கைது செய்யப்பட்டவர்கள் 3 நாள்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Empat remaja tempatan berusia 17 hingga 23 tahun ditahan selepas rakaman video mereka bertengkar dan mengancam pegawai polis di hadapan sebuah balai polis tular di media sosial. Mereka ditahan pada jam 7.40 malam selepas kejadian berlaku pada 4.40 petang. Pihak polis menasihatkan orang ramai agar tidak membuat spekulasi mengenai video tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *