எல்.ஆர்.டி அம்பாங் வழித்தடத்தில் இன்று முதல் தற்காலிக சேவை தொடங்குகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 6:  சென்ற வாரம் சான் சோ லின் எல்.ஆர்.டி ரயில் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,  அம்பாங் வழித்தட ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் அந்த வழித்தடத்திற்கான சேவைகள் தற்காலிக முறையில் இயக்கப்படும் என ரேபிட் கேஎல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ரயில்கள் வழக்கமான வேகத்தை விடக் குறைவான வேகத்திலும், சற்று கூடுதல் நேர இடைவெளியிலும் இயக்கப்படும்.

பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பயணிகள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக முக்கிய நிலையங்களுக்கு இடையே 10 இலவச மாற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் தங்களின் பயண நேரத்தைக் முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *