பினாங்கு மாநகர் மன்ற ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு !

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

பினாங்கு, ஏப். 15-

பினாங்கு மாநிலத்தில் மக்கள் நலனுக்காக பல்வேறு வழிகளில் பற்பல பயன்மிகுந்த திட்டங்களை நிறைவேற்றி செவ்வனே பங்காற்றி வரும் இங்கிருக்கும் மாநகர் மன்ற ஏற்பாட்டில், அண்மையில் கோலாகலமாக அனுசரிக்கப்பட்ட நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில், திரளான பொது மக்கள் பங்கேற்று, பலதரப்பட்ட உணவு வகைகளின் படையல்களில் கலந்து கொண்டனர்.

மாநிலத்தின் துன் டாக்டர் அவாங் சாலையிலுள்ள ஸ்பைஸ் அரினா மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்ற இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சிக்கு பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா அஹ்மாட் ஃபூசி அப்துல் ரசாக் தமது துணைவியார் தோபுவான் துன் டத்தோஸ்ரீ உத்தாமா கத்திஜா முகமட் நோர் அம்மையாருடன் டன் முன் முன்னணிப் பிரமுகராக கலந்து கொண்டார்.

மாநகர் மன்றத் தலைவர் டத்தோ அ.ராஜேந்திரன் தமது துணைவியார் டத்தின் தி.தேவிகாவுடன் சிறப்பாக வழி நடத்திய இந்த உபசரணை விழாவுக்கு பினாங்கு மாநில முதல்வர் சௌ கோன் இயாவ் தம்பதியர், மாநிலச் செயலாளர் டத்தோ ஹஜி எல்கிப்ளி லோங், மாநில ஆட்சிக்குழுவில் பொறுப்பு வகிக்கும் ஹிங் மூய் லாய், லிம் சிவ் கிம், மாநில முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் தம்பதியர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் வருகையளித்திருந்தனர்.

மாநகர் மன்றச் செயலாளர் சியோங் சீ ஹொங், மன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த வருகையாளர்களை இன்முகத்துடன் வரவேற்று, உபசரித்த வேளையில், பிரபல இசைக் கலைஞர் முகமட் சைஃபுல் தனது அபார ஆற்றலால் பல்வகைப் பாடல்களைப் பாடி, விருந்தினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

மாநில மாநகர் மன்றத்தின் நட்சத்திரக் கலைஞர்களாக திகழும் செயிட் அரிஸாம், மஸ்னி மஸ்லான், முகமட் முக்லிஸ் ஹைகால் ஆகியோர் இணைந்து படைத்த பற்பலப் பாடல்களும் நடனங்களும் பார்வையாளர்களைக் கவர்ந்து, ஆரவாரத்திற்கு வித்திட்ட வேளையில், விழாவின் முக்கிய அம்சமாக கவர்ச்சிகரமான உடையணிந்து, எழில் நயத்துடன் தோற்றமளித்த ஆடவர்/பெண்டிர் ஆகிய இருபாலருக்கும் நடத்தப்பட்ட போட்டிகளில் வாகையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Di Pulau Pinang, sebuah majlis berbuka puasa besar-besaran telah diadakan di Spice Arena, yang dihadiri oleh ramai orang termasuk Gabenor dan Menteri Besar. Acara ini diserikan dengan persembahan muzik dan tarian, serta pertandingan pakaian yang melibatkan pengunjung.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *