ஹோட்டலாக மாறும் பினாங்கு 'பிக் பென்'!
- Shan Siva
- 13 Jan, 2026
பினங்கு, ஜன 13: பினாங்கு பிக் பென் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற மலேஷியன் ரயில்வே கட்டிடம், புட்டிக் ஹோட்டலாக மாற்றப்பட உள்ளது, என்று போக்குவரத்து அமைச்சர் லோகே சியூ ஃபூக் அறிவித்தார்.
1909-ல் கட்டிடவியல் வல்லுனர் ஏ.பி. ஹப்ப்பேக் வடிவமைத்த இந்த மூன்று மாடி எட்வர்டியன் ஸ்டைல் கட்டிடம் ஜார்ஜ் டவுனில் வரலாற்று சின்னமாகும். அதன் உயரமான கடிகார கோபுரம் மற்றும் ஐரோப்பிய மற்றும் ஆசிய கலவை வடிவமைப்பு அம்சங்கள் அதனை தனித்துவமாக்குகின்றன.
இதற்கு முன்னர் Customs Department பயன்பாட்டுக்குப் பிறகு Menara Kastam என பரவலாக அழைக்கப்பட்டது. 2023-ல் அவர்கள் வெளியேறியதால் வெறுமையாக இருந்தது.
இப்போது இது பழையதும், புறக்கணிக்கப்பட்டதுமான தோற்றம் தருகிறது. ஆனால் இதை ஒரு பொக்கிஷமாக மாற்றப் போகிறோம் என்று அவர் கூறினார்.
இந்த மாற்றுத் திட்டம் ஜார்ஜ் டவுன் யூனெஸ்கோ மரபு மண்டலத்தின் முக்கிய ஈர்க்கும் இடமாக கட்டிடத்தை உருவாக்கும் நோக்கில் உள்ளது என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



