பிரதமரின் மூத்த அரசியல் செயலாளராக தெங்கு ஸஃப்ருல் நியமனம்
- Shan Siva
- 05 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 5: தெங்கு ஸஃப்ருல் அசிஸ் பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், Tengku Zafrul Aziz இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு இந்தப் பொறுப்பில் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வளமும் மக்களின் நலனும் கருதி, இந்த பொறுப்பை தெங்கு ஸஃப்ருல் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் நிறைவேற்றுவார் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமரின் மூத்த அரசியல் செயலாளராக இருந்த Shamsul Iskandar Akin பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட காலியிடத்தை நிரப்பும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



