ஹாரி கேன் இரட்டை கோல்; குரோஷியாவை 4-2 என வீழ்த்தியது இங்கிலாந்து

top-news
FREE WEBSITE AD

டல்லாஸ், ஜூன் 18 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் எல்’ பிரிவு தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.

டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் 12-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.

எனினும், 36-ஆவது நிமிடத்தில் மார்ட்டின் படுரினா அடித்த கோல் மூலம் குரோஷியா 1-1 என சமநிலையை எட்டியது. அதற்குப் பதிலளித்த இங்கிலாந்து, முதல் பாதி முடிவதற்கு முன் 42-ஆவது நிமிடத்தில் ஹாரி கேன் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்து மீண்டும் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

ஆனால் முதல் பாதி கூடுதல் நேரத்தின் ஐந்தாவது நிமிடத்தில் பெட்டார் மூசா அடித்த கோல் மூலம் குரோஷியா மீண்டும் சமநிலையை ஏற்படுத்தியது. இதனால் முதல் பாதி 2-2 என்ற கணக்கில் நிறைவடைந்தது.

இரண்டாவது பாதி தொடங்கிய உடனேயே, 47-ஆவது நிமிடத்தில் ஜூட் பெல்லிங்கம் கோல் அடித்து இங்கிலாந்தை மீண்டும் முன்னிலைக்கு அழைத்துச் சென்றார். அதன் பின்னர் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து, 85-ஆவது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் அடித்த கோல் மூலம் வெற்றியை உறுதி செய்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *