மூத்த வழக்கறிஞர் வி.ஜெயரத்தினம் தனது 101-வது வயதில் காலமானார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 5: நாட்டின் மூத்த வழக்கறிஞரான வி. ஜெயரத்தினம், நேற்று காலை தனது 101-வது வயதில் காலமானார். தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் ஒரு திறமையான குற்றவியல் வழக்கறிஞராக இருந்த ஜெயரத்தினம், ஈப்போவில் அமைந்துள்ள பேராக் டர்ஃப் கிளப்பின் நீண்டகாலத் தலைவராகப் பணியாற்றிய பெருமையையும் பெற்றவர்.

1953-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்ட ஜெயரத்தினம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் இலாப நோக்கற்ற அறக்கட்டளையான யயாசான் சுல்தான் இட்ரிஸ் ஷாவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜெயரத்தினத்தின் மருமகனும் வழக்கறிஞருமான எர்னஸ்ட் பாலசிங்கம், தனது மாமனார் காலமானதை உறுதிப்படுத்தினார். ஜெயராஜா, ஜெயமலர் மற்றும் ரத்னமலர் என்ற மூன்று பிள்ளைகளும், சங்கர் மற்றும் ஜெயந்தி என்ற இரண்டு பேரப்பிள்ளைகளும் அவருக்கு உள்ளனர். ஜெயரத்தினத்தின் மனைவி, டாக்டர் ராஜமலர் ஜெயரத்தினம், 2008-ஆம் ஆண்டு தனது 78-வது வயதில் காலமானார்.

இந்நிலையில், இன்று இரவு 8.45 மணிக்கு ஈப்போவில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெறும், அதே வேளையில் இறுதிச் சடங்கு நாளை சனிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *