பெர்சாத்துவுக்குள் அதிகரிக்கும் பதற்றம்!
- Shan Siva
- 10 Jan, 2026
துணைத் தலைவர் ஹம்சா சைனுதீனுக்கு நெருக்கமான இரண்டு
நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த மாதம்
நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக கட்சியின் கட்டொழுங்கு வாரியத்தால் விசாரணைக்கு
அழைக்கப்பட்டுள்ளனர்.
லாருட் பெர்சாத்து தலைவர் ஹசுவாண்டி ஹம்சா, தனக்கும் கட்டொழுங்கு வாரியத்திடம்
இருந்து கடிதம் கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தினார். “பலருக்கும் கடிதம்
வந்துள்ளது. அதில் நானும் ஒருவராக இருக்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, தெலுக் இந்தான்
பிரிவு தலைவர் கமாருடின் மஜிட், பாடாங்
ரெங்காஸ், கோப்பெங், தாப்பா, லாருட், பாசிர் சாலாக் உள்ளிட்ட பல பிரிவு தலைவர்கள் விசாரணைக்கு
அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பாடாங் ரெங்காஸ் எம்.பி. அசஹாரி ஹசன் மற்றும் கெரிக்
எம்.பி. ஃபதுல் ஹுசிர் ஆயோப் ஆகியோரும் இதில் அடங்குவர். கெரிக் நாடாளுமன்ற
உறுப்பினர் ஃபதுல் ஹுசிர் ஆயோப், புதன்கிழமை விசாரணைக்கு
ஆஜராக அழைப்பு வந்துள்ளதாக உறுதிப்படுத்தினார்.
“பிரச்சினையைத் தீர்க்க வேறு வழிகள் இருக்கலாம். ஆனால்
ஒழுக்க நடவடிக்கையே தேர்வு செய்யப்பட்டால், அதை எதிர்கொள்ள அனைவரும் தயாராக உள்ளோம்,” என அவர் கூறினார்.
கடந்த மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முஹ்யித்தீன் யாசின் பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து
விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதுதான், இந்த ஒழுக்க நடவடிக்கைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பேராக் மாநிலத்தில் உள்ள 24 பிரிவுகளில் 14 பிரிவுகள், கட்சியின் உள்நிலை நெருக்கடியை சரியாக கையாளத் தவறியதாகக்
கூறி, முகைதீன் யாசின் பதவி விலக
வேண்டும் என கோரியிருந்தன.
கட்டொழுங்கு வாரியத்தின் அறிவிப்பின்படி, இந்த நடவடிக்கைகள் பெர்சாத்து மற்றும் பெரிக்காத்தான்
நேஷனல் கூட்டணியின் ஆதரவை பாதித்ததாகவும், கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. கட்சியின் ஆண்டுப்
பொதுக்கூட்டத்திற்கு பிறகு, முகைதீனை
பதவியிலிருந்து அகற்றும் சதி குறித்த அநாமதேய கடிதம் வெளியானதைத் தொடர்ந்து, பெர்சாத்துவுக்குள் உள்நிலை பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



