போதைப்பொருள் மறுவாழ்வுக் கழகத்திற்கு அருகில் சிறுத்தைப் புலி!

top-news
FREE WEBSITE AD

ஜெலுபு. ஏப்.15-

போதைப்பொருள் மறுவாழ்வுக் கழகத்திற்கு அருகில் சிறுத்தைப் புலி வந்ததாக சந்தேகிக்கப்பட்டது தொடர்பில் நெகிரி செம்பிலான் மாநில வனவிலங்குப் பாதுகாப்புத் துறை மற்றும் தாமான் நெகாரா பெர்ஹிலித்தான் புகார் பெற்றது.

இச்சம்பவம் தொடர்பான புகார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணிக்குப்
பெறப்பட்டதாக மாநில பெர்ஹிலித்தான் இயக்குநர் ஃபைஸால் இஸாம் பிக்ரி தெரிவித்தார்.அந்த வளாகத்தில் ஆட்டுக் கொட்டகை ஒன்று இருக்கிறது. அதில் இந்த சிறுத்தைப் புலி அத்துமீறி நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இருந்த போதிலும் அது தோல்வியுற்றது. இதில் ஒரு பாதுகாப்பு அம்சமாக அந்த சிறுத்தைப் புலி உள்ளே நுழையாமல் இடைவெளியை இறுக்கமாக மூடும்படி அறிவுறுத்தப்படுகிறது.அந்த கழகம் செய்த புகாரை நாங்கள் அவ்வப்போது கண்ணோட்டமிடுவோம் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது ஃபைஸால் இஸாம் பிக்ரி குறிப்பிட்டார்.

Negeri Sembilan menerima aduan tentang kemunculan harimau kumbang berhampiran pusat pemulihan dadah. Jabatan Perhilitan menyiasat kejadian dan menasihatkan agar langkah keselamatan diperketat, terutama di kawasan kandang kambing berdekatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *