மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும்! அரசு உத்தரவாதம்-டத்தோஸ்ரீ சைஃபுடின்!

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார். டிச. 5-

தரவுகளின் பாதுகாப்பு. குறிப்பாக நாட்டு மக்களின் தரவுகள் எப்போதும் பாதுகாக்கப்படும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.அடையாள அட்டை அல்லது மைகாட் தரவு கசிவுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

"நான் உடனடியாக சரி பார்த்தேன். முதலில் தேசிய பதிவுத் துறையிடம்; இரண்டாவதாக மலேசிய தேசிய இணையப் பாதுகாப்பு நிறுவனம். பாதுகாப்பு குறித்த உத்தரவாதம் தொடர்பில் அவ்விரண்டுமே இது போன்ற சம்பவங்கள் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தின. நாட்டு மக்களின் தரவுகள் எப்போதும் பாதுகாக்கப்படும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். அதுதான், தேசிய பதிவுத் துறையின் முதன்மைப் பணி, " என்றார் அவர்.

ஒரு கோடியே 70 லட்சம் மலேசிய மக்களின் மைகாட் தரவுகள் கசிந்து சட்டவிரோத இணையதளங்களில் விற்கப்பட்டதாகக் கூறப்படும் ஊடக அறிக்கைகள் குறித்து டத்தோஸ்ரீ சைஃபுடின் அவ்வாறு கருத்துரைத்தார். கெடா, அலோர் ஸ்டார். புக்கிட் திங்கி ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு நேற்று வருகையளித்த அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்..

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *