பெரிக்காத்தான் நேஷனலில் பலம் இல்லை.... எனவேதான் மலாய் ஒற்றுமை பேசுகிறது பாஸ்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 4: பெரிகாத்தான் நேஷனல் பலவீனமான நிலையில் இருக்கும்போது மட்டுமே PAS மலாய் ஒற்றுமைப் பிரச்சினையை எழுப்புகிறது என்று Umno உச்ச மன்ற உறுப்பினர் நூர் ஜஸ்லான் முகமது குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது அவர்கள் எதிர்க்கட்சியாகி பலவீனமடைந்துள்ள நிலையில், பெரிக்காத்தான் நேஷனல் கட்சி பிளவுபட்டு, அடுத்த தேர்தலுக்கு முன்னதாக வளப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்கள் திடீரென மலாய் ஒற்றுமை பற்றிப் பேசத் தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறினார்.

மேலும், மலாய்காரர்களைப் பிளவுபடுத்த இஸ்லாத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் பாஸ் கட்சியின் நீண்டகால அரசியல் அணுகுமுறையையும் அந்த செனட்டர் சாடினார்.

ஜொகூர் மாநில சட்டமன்றம் திங்களன்று கலைக்கப்பட்டது. இதன்மூலம், 60 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டிய 16வது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கு வழிவகை செய்யப்பட்டது.

பாரிசான் நேஷனல், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய கட்சிகள் ஒவ்வொன்றும் 56 இடங்களிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *