பெரிக்காத்தான் பொருளாளர் ராஜினாமா மொகிதீன் தலைமையில் பாஸ் அதிருப்தி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 15-

பெரிக்காத்தான் நேஷனலின் தலைமைப் பொருளாளர் பதவியை பாஸ் கட்சி உதவித் தலைவர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் ராஜினாமா செய்திருப்பதானது அக்கூட்டணியில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சாத்தியத்தை புலப்படுத்துவதாக, பெர்சத்து தலைவர் ஒருவர் கூறியிருக்கின்றார்.

டான் ஸ்ரீ முஹிடின் யாசின் கீழான பெரிக்காத்தான் நேஷனல் தலைமைத்துவத்திற்கு பாஸ் கட்சி விடுத்திருக்கும் மறைமுகமான மற்றும் வலுவான செய்தியாக, சம்சூரியின் 'ராஜினாமா விளங்குவதாக நம்பப்படுகிறது..அடுத்த பொதுத் தேர்தலில், பெரிக்காத்தான் நேஷனலின் வாய்ப்பை தடுக்கக் கூடிய உள்கட்சி பிரிவினையை தடுத்து நிறுத்த, இந்த விவகாரம் உடனடியாக களையப்பட வேண்டியிருப்பதாக, தமது பெயரை வெளியிட மறுத்துவிட்ட அந்த பெர்சத்து தலைவர் கூறியுள்ளார்.

“தற்செயலானதாகவோ அல்லது திட்டமிட்டபடியோ நடந்திருந்தாலும், பெரிக்காத்தான் நேஷனலின் முக்கியமான பதவிகளுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், பெரிக்காத்தான் நேஷனல் தலைமைப் பொருளாளர் பதவியை சம்சூரி ராஜினாமா செய்திருந்தார்.'அண்மைய நியமனங்களினால் பாஸ் கட்சி அதிருப்தி அடைந்திருக்கின்றதா என்பதை, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் எனும் முறையில் முஹிடின் ஆராய வேண்டும்.

ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்டுள்ள முடிவு என்று கருதி, பாஸ் கட்சி தனது அதிருப்தியை சம்சூரியின் ராஜினாமா மூலம் தெரிவித்திருக்கலாம் என்பதால், இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது" என்று அந்த பெர்சத்து தலைவர் குறிப்பிட்டார்.பெர்சத்து நேஷனலின் தலைமைச் செயலாளராக அஸ்மின் அலி நியமிக்கப்பட்டது உட்பட, அக்கூட்டணியின் முக்கிய பதவிகளில் பெர்சத்து கட்சியின் சில தலைவர்கள் நியமிக்கப்பட்ட இரண்டாவது நாளில், அக்கூட்டணியின் தலைமைப் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்திருப்பதை சம்சூரி உறுதிப்படுத்தி இருந்தார்.

அஸ்மினைத் தவிர்த்து, பெரிக்காத்தானின் துணைத் தலைவராக பெர்சத்துவின் துணைத் தலைவர் ஹம்ஸா ஸைனுடினும், கூட்டணியின் தகவல் பிரிவுத் தலைவராக பெர்சத்துவின் உதவித் தலைவர் அஹ்மாட் ஃபைஸால் அஸுமுவும் வியாக கூட்டணியின் மகளிர் பிரிவுத் தலைவியாக பெர்சத்துவின் மாஸ் எர்மியாத்தி சம்சுடினும் முஹிடினினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *