ஜொகூர் தேர்தலில் களமிறங்கும் பெர்சாமா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 3: ஜொகூர் மாநிலத் தேர்தலில் பெர்சாமா மலேசியக் கட்சி போட்டியிடும் என ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மத் அறிவித்துள்ளனர்.

PKR கட்சியைச் சேர்ந்த இந்த இருவரும், கட்சி போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காண்பதற்காக,  ஜொகூரில் உள்ள பெர்சாமாவின் பிரதிநிதிகளுடன் இன்று மேலதிக கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

மே 17 அன்று பெர்சாமா மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளபோதிலும், 2026 ஜொகூர் மாநிலத் தேர்தல்,  ஜொகூர் வாக்காளர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள பெர்சாமாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

இது, குறுகிய காலத்தில் பெர்சாமா தனது தேர்தல் இயந்திரத்தை நிறுவவும், மற்ற எதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராவதில் அதன் வலிமையைச் சோதிக்கவும் அனுமதிக்கும் என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

பெர்சாமா தனது முக்கிய செயல்திட்டத்தின் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் என்றும், அதன் முதல் நிறுத்தம் ஜூன் 7 அன்று மலாக்காவாக இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர்களுமான அவர்கள் அறிவித்தனர்.

நெகிரி செம்பிலான், பேராக், கிளந்தான், திரெங்கானு, பஹாங், சிலாங்கூர், பினாங்கு, கெடா, பெர்லிஸ் மற்றும் கோலாலம்பூரும் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *