பெர்லிஸ் மந்திரி பெசாராக பெர்சாத்துவின் அபு பக்கார் ஹம்சா பதவியேற்றார்!
- Shan Siva
- 29 Dec, 2025
கோலாலம்பூர், டிச 29: உடல்நலக் காரணங்களால் வியாழன் அன்று ராஜினாமா செய்த சங்லாங் சட்டமன்ற உறுப்பினர் சுக்ரி ரம்லியிடம் இருந்து குவாலா பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர் அபு பக்கார் ஹம்சா பெர்லிஸின் புதிய மந்திரி பெசாராகப் பதவியேற்றார்.
பெர்சாத்துவைச் சேர்ந்த அபு பக்கார் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் இஸ்தானா ஆராவ் நகரில் பெர்லிஸ் ராஜா துவாங்கு சையத் சிராஜுதீன் ஜமாலுல்லைல் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்,
15வது பொதுத் தேர்தலில், PN 15 மாநிலங்களில் 14 இடங்களை வென்றது - ஒன்பது PAS மற்றும் ஐந்து பெர்சாத்து- அதே நேரத்தில் PKR மூலம் பக்காத்தான் ஹராப்பான் ஒரு இடத்தைப் பெற்றது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



