பெரிகாத்தானுக்கு பெர்சாத்து முக்கியமில்லை! - புவாட் சர்காஷி கருத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 27: : வாக்காளர்களை ஈர்ப்பதில் பெரிகாத்தான் நேஷனலுக்கு பெர்சாத்து கட்சி இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்ற கூற்றுகளை அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி நிராகரித்துள்ளார்.

குறிப்பாக, அதன் தலைவர் முகைதீன் யாசின், பெர்சாத்துவின் நிறுவனத் தலைவரும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதீர் முகமதுவுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த பிறகு, பெர்சாத்தி தனது ஈர்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது என்று புவாட் கூறினார்.

அம்னோவுக்கு சவால் விடுவதற்காக, மகாதீரும் முகைதீனும் இணைந்து 2016-ல் பெர்சாத்து கட்சியை நிறுவினர். மக்களவையில் முகைதீனின் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க மறுத்ததாலும், எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தேர்ந்தெடுத்ததாலும், மகாதீர் மே 2020-ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

பிப்ரவரி 2020-ல் நடந்த ஷெரட்டன் நகர்வுக்குப் பிறகு முகைதீன் பிரதமரானார். இதன் விளைவாக, அப்போதைய பெர்சாத்து தலைவரான மகாதீர் தனது உயர் பதவியை ராஜினாமா செய்தார் மற்றும் பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் கவிழ்ந்தது.

அப்போதிருந்து, பெரசாத்து கட்சி பாஸ் கட்சியை பெரிதும் சார்ந்துள்ளது. ஆனால், அவர்களின் மோதல் மோசமடைந்து வருவதால், பெர்சாத்துவின் கவர்ச்சி நிலை மேலும் குறையும்என்று புவாட் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

பெர்சாத்து கட்சி உண்மையிலேயே இன்னும் ஒரு கவர்ச்சிகரமான கட்சியாக இருந்தால், அதன் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனும், அவருடன் இணைந்த பலரும் கட்சியின் தலைமைக்கு எதிராகத் திரும்பியிருக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *