அம்னோவின் நிழலிலிருந்து பெர்சத்து அவசியம் தப்பிக்க வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன. 22-

அம்னோவின் நிழலில் இருந்து பெர்சத்து கட்சி அவசியம் தப்பித்து விலகி இருக்க வேண்டிய அதேவேளையில், தனது நீடித்த தன்மையை உறுதி செய்வதற்காக,தான் உருவாக்கிய கொள்கைகளுக்கு அது திரும்ப வேண்டும் என்று, ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கட்சியின் தலைமைத்துவப் பதவிகளுக்கு அம்னோவின் முன்னாள் தலைவர்களை இனியும் பெர்சத்து நியமிக்கக் கூடாது என்றும், மலாயாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தௌஃபிக் யாக்கோப் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட பெர்சத்து கட்சியின் புதிய உச்சமன்ற உறுப்பினர்கள் பட்டியலை தௌஃபிக் சுட்டிக் காட்டினார்.அதில் அம்னோவின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான நோ ஒமார் இடம் பெற்றிருக்கின்றார்.

கடந்த ஆண்டில் நடந்த கட்சித் தேர்தலில், அலோர் காஜா பெர்சத்து தொகுதித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரும் மலாக்கா மாநில முன்னாள் முதலமைச்சருமான ரஹிம் தம்பி சிக், கட்சியின் புதிய மாநிலத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். இவர்களைத் தவிர்த்து, புத்ராஜெயா அம்னோ தொகுதியின் முன்னாள் துணைத் தலைவரான துன் ஃபைசால் இஸ்மாயில் அஜிஸ், பெர்சத்துவின் தகவல் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

"அம்னோ முன்னாள் தலைவர்களை கட்சிப் பதவிகளுக்கு நியமிப்பதை பெர்சத்து அவசியம் நிறுத்த வேண்டியுள்ளது அல்லது அம்னோவிலிருந்து "ஓடியவர்கள் மற்றும் அதன் வயதான தலைவர்களைக் கொண்ட ஒரு கட்சியாக பெர்சத்து முத்திரை குத்தப்படும்.
'இத்தகையோரின் நியமனங்களினால், பொருத்தமில்லாத ஒரு கட்சியாகவும் அம்னோவில் பதவிகளைக் கொண்டிருக்காதவர்களுக்கான ஒரு கட்சி என்றும் பெர்சத்து அழைக்கப்படும்.

"இல்லையெனில், பெர்சத்துவின் அரசியல் தோற்றம் நீண்ட காலத்திற்கு அம்னோவை பிரதிபலித்துக் கொண்டே இருக்கும் என்று கூறிய தௌஃபிக் இத்தகைய போக்கு நீடித்தால், பெர்சத்துவின் முன்னோடி உறுப்பினர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தலாம் என்றார்.

"தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தலைவர்களில் சிலர் தங்களின் ஆதரவை திசை திருப்பியதுடன், கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் இத்தகைய அதிருப்தி நிலவி வருகிறது என்று தௌஃபிக் தெரிவித்தார்.

மலாய்க்காரர்களின் போராட்டத்திற்கான ஒரு மாற்றுத் தளமாக, அம்னோவுக்கு பதிலாக ஒரு கட்சியை உருவாக்கும் நோக்கத்தில், கடந்த 2016ஆம் ஆண்டில் பெர்சத்து கட்சி உருவாக்கப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *