பெர்சாத்து உடையும் அபாயம்! – உலு லங்காட் தகவல் பிரிவுத் தலைவர் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 12: பெர்சாத்து துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் நீக்கப்பட்டால் பெர்சாத்து கட்சி பிளவுபட வாய்ப்பு உள்ளதாக கட்சியின் லு லாங்கட் தகவல் பிரிவுத் தலைவர் முகமது ஷாஃபிக் அப்துல் ஹலீம் எச்சரித்துள்ளார்.

கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன் ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெர்சாத்து ஏற்கனவே இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளதாக கூறினார். ஒரு தரப்பு செயலாளர்  டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலியுடன் இணைந்த முன்னாள் PKR உறுப்பினர்கள்; மற்றொன்று ஹம்சாவை ஆதரிக்கும் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் என அவர் விளக்கினார்.

அம்னோவிலிருந்து வந்தவர்கள் தங்களுடைய தலைவரை விரும்புகிறார்கள்; PKR-இலிருந்து வந்தவர்கள் அஸ்மினை விரும்புகிறார்கள். அங்கிருந்தே பிளவு தொடங்கியது என்றார் அவர். ஹம்சாவுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை பிளவை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் கூறினார்.

முன்னதாக, பெரிகத்தான் நேஷனல் (PN) தலைவராக டான் ஸ்ரீ முகைதீன் யாசின் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அஸ்மின் அலி மற்றும் தகவல் பிரிவுத் தலைவர் துன் ஃபைசல் இஸ்மாயில் அசீஸ் ஆகியோரை விமர்சித்தது, கூட்டணியில் PAS-ஐ திறம்பட ஆதரித்தது ஆகிய காரணங்களுக்காக ஷாஃபிக் ஒழுக்காற்றுக் குழுவால் அழைக்கப்பட்டார்.

கட்சிக்குள் கருத்துச் சுதந்திரம் குறைந்து வருவதாகவும், ஒழுக்காற்றுக் குழுவின் தீர்ப்பு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கட்சி என்பது ஒரே ஒருவரா? அஸ்மின் தானா? துன் ஃபைசலா? முகைதீனா? இல்லை, பெர்சாத்து தன்னுடைய கொள்கைகளைக் கொண்ட அமைப்பா? தலைவர்கள் வரலாம், போகலாம்; ஆனால் கட்சி நீடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *