லங்காவியில் வாடகை அறையில் இருந்தவர் சடலமாக மிட்பு!
- Shan Siva
- 07 Sep, 2026
கோலாலம்பூர்,
செப் 9: லங்காவி, பாடாங்
மாட்சிராட்டில் உள்ள வாடகை அறையில், மூன்று நாட்களாகத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்த வேலையற்ற நபர் ஒருவர்
நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
மாலை சுமார் 6.55 மணியளவில் அந்த நபரின் உறவினர் பெண் ஒருவர்
வீட்டின் உரிமையாளருக்குத் தகவல் அளித்ததாக லங்காவி காவல் துறைத் தலைவர் கைருல்
அசார் நூருதீன் தெரிவித்தார். பல நாட்களாக அந்த நபரைத் தொடர்புகொள்ள முடியாததால்
அந்த உறவினர் கவலையடைந்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பலமுறை அழைத்தும்
பதில் இல்லாததால், வீட்டின்
உரிமையாளர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, பாதிக்கப்பட்ட நபர் படுக்கையில் அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு
காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார் என்று அவர் கூறியதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபரின்
உடலில் எந்தவிதமான போராட்டத்திற்கான அறிகுறியோ அல்லது வெளிப்புறக் காயங்களோ இல்லை
என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததாக கைருல் கூறினார்.
சந்தேகத்திற்கிடமான
சூழலோ அல்லது குற்றச் செயல் நடந்ததற்கான அறிகுறிகளோ இல்லை; மேலும், அவருக்கு
மருத்துவப் பிரச்சினைகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை என்று அவர்
குறிப்பிட்டார்.
இச்சம்பவம் 'திடீர் மரணம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



