மஞ்சோங் மாவட்ட பள்ளிகளுக்கிடையிலான வீசுபந்து போட்டியில் பெருவாஸ் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.கிருஷ்ணன்)

பெருவாஸ், ஏப். 28-

மஞ்சோங்கில் நடந்து முடிந்த மஞ்சோங் மாவட்ட பள்ளிகளுக்கிடையிலான 12 வயதுக்குட்பட்ட வீசுபந்து போட்டியின் பெண்கள் பிரிவில் பெருவாஸ் தமிழ்ப்பள்ளி வாகை சூடி சாதனையை ஏற்படுத்தியது.

மஞ்சோங் வட்டாரத்தில் உள்ள 32 தொடக்கப் பள்ளிகள் இப்போட்டியில் பங்கெடுத்தன. ஜி குழுவில் இடம்பெற்றிருந்த பெருவாஸ் தமிழ்ப்பள்ளி, குழுமுறையில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று அடுத்தகட்ட சுற்றுக்கு முன்னேறியது. அச்சுற்றில் எங் லிங் சீனப்பள்ளியை 13-2 என்ற கோல் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

கால் இறுதிச் சுற்றிலும் மெத்தடிஸ் தேசியப் பள்ளியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். அரையிறுதி சுற்றில் பலத்த போட்டிக்கு இடையில் அண்ட்லி தேசியப் பள்ளியை வென்று, இறுதிப் போட்டியில் கால் பதித்த பெருவாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், பலம்பொருந்திய குழுக்களில் ஒன்றான பெருவாஸ் தேசியப் பள்ளியை பினால்டி வழி தோற்கடித்தனர்.

இவ்வெற்றியானது பெருவாஸ் தமிழ்ப்பள்ளியின் பெயரை மஞ்சோங் வட்டாரத்தில் வலுவடையச் செய்துள்ளதாக இப்பள்ளியின் தலைமையாசிரியர் குணசீலன் மனோகரன் தெரிவித்தார். மேலும், நேரம் காலம் பாராது அயராது பாடுபட்ட பயிற்றுநர் ஆசிரியர் நாகராஜனுக்கு தனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டார்.
அவருக்கு உறுதுணையாக இருந்த பள்ளிப் புறப்பாட ஆசிரியர் பௌத்ரன் மற்றும் ஆசிரியர்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், மாணவி தபாஸ்வினி சிறந்த விளையாட்டளர் விருதும் மாணவி தனுஷா சிறந்த கோல் காவலர் விருதும் வழங்கி சிறப்பித்தது வெற்றிக்கு மணிமகுடமாக அமைந்தது.

Pasukan perempuan Sekolah Tamil Peruas menjuarai kejohanan bola baling bawah 12 tahun daerah Manjong. Mereka menewaskan beberapa sekolah termasuk SK Peruas dalam perlawanan akhir. Guru, jurulatih dan pemain menerima pujian atas kejayaan cemerlang ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *