வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்புப் பணியாளர்கள்!
- Shan Siva
- 12 Nov, 2026
கோலாலம்பூர், நவ 12: மலேசியாவில் 2026-2027 வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள கிட்டத்தட்ட 1 லட்சத்து 2 ஆயிரம் மீட்புப் பணியாளர்களும், 40 ஆயிரம் அவசரகாலப் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 8,321 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரே நேரத்தில் சுமார் 19 லட்சம் பேருக்கு இடமளிக்க முடியும்.
மேலும், சுமார் 2,450 படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் லாரிகள் தயார் நிலையில் உள்ளன.
வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் முக்கிய ஆவணங்கள், மருந்துகள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அவசரத் தேவைகளை முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

