மலாக்கா தேர்தலுக்கு முன் தேசிய முன்னணியின் உள்கட்சி பிரச்சினைக்குத் தீர்வு!

top-news

புத்ராஜெயா, அக் 27: மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாள் வரும் சனிக்கிழமை நடைபெறுவதற்கு முன்பாக, தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

மலாக்கா தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோவும், மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங்கும் சந்தித்துப் பேசியதாக அவர் கூறினார். இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காணும் நோக்கில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் இன்று உயர்கல்வி அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாம்ப்ரி, பிரச்சினைகள் இருந்தால் வெளிப்படையாக மோதிக்கொள்வதற்குப் பதிலாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதே தேசிய முன்னணியின் அணுகுமுறை எனக் குறிப்பிட்டார்.

வேட்புமனுத் தாக்கல் நாளுக்கு முன்னதாகப் பிரச்சினை தீர்க்கப்படுமா என்று கேட்கப்பட்டபோது, அதற்கான உறுதியை அவர் அளித்தார். எனினும், எட்டப்படவுள்ள தீர்வு குறித்து விரிவாகக் கூற மறுத்த அவர், பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

இதற்கிடையே, மசீசவின் உயர்மட்டத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தேசிய முன்னணி அறிவிக்கும் எந்தவொரு வேட்பாளரையும் அங்கீகரிக்கப் போவதில்லை என மசீச முன்னதாகத் தெரிவித்திருந்தது.

வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பு மசீசவுடன் கலந்தாலோசிக்காமல் இருப்பதும், கட்சியின் ஒப்புதலைப் பெறாததும் ஏற்றுக்கொள்ள முடியாதது என வீ கா சியோங் கூறியிருந்தார். மேலும், கடந்த தேர்தல்களில் மசீச போட்டியிட்ட சில தொகுதிகள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்