வகுப்பு உரிமத்தைப் பெறுவதற்கான இறுதி கட்டத்தில் மெட்டா-ஃபஹ்மி ஃபட்சில்!

- Muthu Kumar
- 17 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 17:
சமூக ஊடக நிறுவனமான மெட்டா, மலேசியாவில் அதன் பயன்பாட்டு சேவை வழங்குநர் (ASP) வகுப்பு உரிமத்தைப் பெறுவதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா உரிமம் வழங்கும் செயல்முறைக்கான குறிப்பிட்ட சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஆவணங்களை இறுதி செய்து வருவதாக ஃபஹ்மி கூறினார்.
கடந்த ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி, மலேசியாவில் குறைந்தது எட்டு மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி சேவைகளும் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் உரிமத்தைப் பெற வேண்டும் என்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *