பெட்ரோல் - டீசல் விலை இன்று முதல் RM 35 சென் உயர்கிறது!
- Shan Siva
- 17 Sep, 2026
கோலாலம்பூர், செப் 17: RON97 பெட்ரோல், மானியம் இல்லாத RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் இன்று முதல் 35 சென் (sen) அதிகரிக்கவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, RON97 பெட்ரோல் லிட்டருக்கு RM4.85-க்கும், மானியம் இல்லாத RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM4.37-க்கும், மானியம் இல்லாத டீசல் லிட்டருக்கு RM5.27-க்கும் விற்பனை செய்யப்படும்.
BUDI95 திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோல் தொடர்ந்து லிட்டருக்கு RM1.99 விலையிலும், BUDI டீசல் திட்டத்தின் கீழ் டீசல் லிட்டருக்கு RM2.10 விலையிலும் விற்பனை செய்யப்படும்.
மானியம் பெறும் பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு RM2.05-ஆகவும், மானியம் பெறும் டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் வரும் டீசல் விலை லிட்டருக்கு RM2.15-ஆகவும் தொடரும்.
இந்த விலைகள் செப்டம்பர் 23 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



