பெட்ரோல் - டீசல் விலை 8 சென் உயர்வு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: தீபகற்ப மலேசியாவில் டீசல் சில்லறை விலை லிட்டருக்கு 8 சென் அதிகரித்து RM3.12 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சபா, சரவாக் மற்றும் லபுவான் பகுதிகளில் டீசல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு RM2.15 ஆகவே தொடரும். இந்த விலைகள் மார்ச் 5 முதல் 11 வரை அமலில் இருக்கும்.

நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், RON97 பெட்ரோல் விலை 10 சென் உயர்ந்து லிட்டருக்கு RM3.25 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலப்பகுதியில், மானியமற்ற RON95 பெட்ரோல் விலை 8 சென் அதிகரித்து லிட்டருக்கு RM2.67 ஆகும்.

ஆனால் Budi95 முயற்சியின் கீழ் வழங்கப்படும் மானிய RON95 பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு RM1.99 ஆகவே இருக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக எண்ணெய் சந்தையின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, RON97, RON95 மற்றும் டீசல் விலைகளை அரசு தொடர்ந்து பரிசீலித்து தேவைக்கேற்ப திருத்தம் செய்து வருவதாகவும், விலை நிலைத்தன்மையை பேணுவது அரசின் முக்கிய முன்னுரிமை எனவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *