இன்று முதல் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு!
- Shan Siva
- 24 Sep, 2026
கோலாலம்பூர், செப் 24: RON97 பெட்ரோல், மானியம் இல்லாத RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
RON97 மற்றும் மானியம் இல்லாத RON95 ஆகியவற்றின் விலைகள் தலா 20 சென் (sen) அதிகரித்து, முறையே லிட்டருக்கு RM5.05 மற்றும் RM4.57 ஆக உயரும்.
அதேவேளையில், மானியம் இல்லாத டீசலின் சில்லறை விலை 15 சென் அதிகரித்து, லிட்டருக்கு RM5.42 ஆக இருக்கும்.
BUDI95 திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோல் தொடர்ந்து லிட்டருக்கு RM1.99 என்ற விலையிலும், BUDI Diesel திட்டத்தின் கீழ் டீசல் லிட்டருக்கு RM2.10 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும்.
மானியம் பெறும் பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் வரும் பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM2.05 ஆகவும், மானியம் பெறும் டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் வரும் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருக்கும்.
இவ்விலைகள் செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



