பெட்ரோல் - டீசல் விலை இன்று முதல் உயர்வு காண்கிறது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 23: மானியமில்லாத RON97 மற்றும் RON95 ரக பெட்ரோல் விலை இன்று முதல் 20 சென் உயரும், அதே போ மானியமில்லாத டீசலின் விலை 35 சென் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானியமில்லாத RON97 ரக  பெட்ரோல் ஒரு லிட்டருக்கு RM4.20 என்ற விலையிலும், மானியமில்லாத RON95 ரக பெட்ரோல் ஒரு லிட்டருக்கு RM3.6. சென் என்ற விலையிலும் மற்றும் மானியமில்லாத டீசல் ஒரு லிட்டருக்கு RM4.42 என்ற விலையிலும் நிர்ணயிக்கப்படும் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

BUDI95 திட்டத்தின் கீழ் விற்கப்படும் RON95, ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற விலையில் தொடர்ந்து விற்கப்படும், அதே போல் BUDI டீசல் முன்முயற்சியின் கீழ் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு RM2.10 என நிர்ணயிக்கப்படும்.

மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் வழங்கப்படும் மானிய பெட்ரோல் ஒரு லிட்டருக்கு RM2.05 என்ற விலையிலேயே தொடரும், அதே போல் மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் வழங்கப்படும் மானிய டீசல் ஒரு லிட்டருக்கு RM2.15 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். இந்த புதிய விலைகள் ஜூலை 29 வரை அமலில் இருக்கும்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *