பெட்ரோல் - டீசல் விலை இன்று முதல் 5 சென் குறைகிறது!
- Shan Siva
- 06 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 6: RON97 பெட்ரோல் மற்றும் மானியமில்லா RON95, டீசல் ஆகியவற்றின் விலைகள் இன்று முதல் ஐந்து சென் குறையும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இன்று முதல் RON97 பெட்ரோல் ஒரு லிட்டர் RM4.35 எனவும், மானியமில்லா RON95 பெட்ரோல் ஒரு லிட்டர் RM3.77 எனவும் விலை நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதற்கிடையில், மானியமில்லா டீசல் ஒரு லிட்டர் RM4.57 என விற்கப்படும்.
BUDI95 திட்டத்தின் கீழ் விற்கப்படும் RON95, ஒரு லிட்டர் RM1.99 என்ற விலையில் தொடர்ந்து விற்கப்படும், அதேசமயம் BUDI டீசல் முன்முயற்சியின் கீழ் டீசலின் விலை ஒரு லிட்டர் RM2.10 என நிர்ணயிக்கப்படும்.
மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் வழங்கப்படும் மானிய பெட்ரோல் ஒரு லிட்டர் RM2.05 என்ற விலையிலேயே தொடரும், அதேசமயம் மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் வழங்கப்படும் மானிய டீசல் ஒரு லிட்டர் RM2.15 என்ற விலையில் விற்கப்படும்.
இந்த விலைகள் ஆகஸ்ட் 12 வரை அமலில் இருக்கும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



