இன்று முதல் பெட்ரோல் - டீசல் விலை குறைகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 28: தீபகற்ப மலேசியாவில் RON97 பெட்ரோல், மானியமில்லா RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் இன்று முதல் குறைக்கப்படும் என நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

RON97 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு RM4.85-லிருந்து 20 சென் குறைந்து RM4.65 ஆகவும், மானியமில்லா RON95 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு RM4.07-லிருந்து 15 சென் குறைந்து RM3.92 ஆகவும் இருக்கும்.

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு RM4.97-லிருந்து 10 சென் குறைந்து RM4.87 ஆக இருக்கும்.

BUDI95 திட்டத்தின் கீழ் விற்கப்படும் RON95 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற அளவில் தொடரும், அதே சமயம் கிழக்கு மலேசியாவில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு RM2.15 என்ற அளவில் மாற்றமின்றி இருக்கும்.

மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் வழங்கப்படும் மானிய பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு RM2.05 ஆகவும், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் வழங்கப்படும் மானிய டீசல் விலை ஒரு லிட்டருக்கு RM2.15 ஆகவும் தொடரும்.

இந்த விலைகள் ஜூன் 3 வரை அமலில் இருக்கும்1

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *