இன்று முதல் பெட்ரோல் RM 25 சென் குறைகிறது; டீசல் RM 30 சென் குறைகிறது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 25: இன்று முதல், RON95 மற்றும் RON97 ஆகியவற்றின் சில்லறை விலைகள் லிட்டருக்கு 25 சென் குறைந்து முறையே RM3.47 மற்றும் RM4.10 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 30 சென் குறைந்து RM4.07 ஆகவும் இருக்கும்.

நேற்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், BUDI95 திட்டத்தின் கீழ் விற்கப்படும் RON95, கிழக்கு மலேசியாவில் தொடர்ந்து லிட்டருக்கு RM1.99 என்ற விலையிலும், டீசல் லிட்டருக்கு RM2.15 என்ற மானிய விலையிலும் விற்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் வழங்கப்படும் மானிய பெட்ரோல் லிட்டருக்கு RM2.05 என்ற விலையிலும், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் வழங்கப்படும் மானிய டீசல் லிட்டருக்கு RM2.15 என்ற விலையிலும் விற்கப்படும்.

இந்த விலைகள் ஜூன் 30 வரை அமலில் இருக்கும்.

மேலும், ஜூலை 1 முதல் BUDI டீசல் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தும் என்றும், இத்திட்டத்தின் கீழ் டீசல் வாகனங்களின் தனியார் உரிமையாளர்கள் ஒரு லிட்டர் டீசலை RM2.10 என்ற மானிய விலையில் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அமைச்சகம் கூறியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *