நாம் ஒன்றாக அமர்ந்து விவாதிப்போம்! - பிரதமருக்கு முகைதீன் அழைப்பு
- Shan Siva
- 05 Apr, 2026
மூவார், ஏப் 5: தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்தவொரு முயற்சியையும் அரசாங்கம் நேர்மையாகவும் தீவிரமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் கேட்டுகொண்டுள்ளார்.
எந்தவொரு பணிக்குழுவிலும் எதிர்க்கட்சியை ஈடுபடுத்துவதில் அரசாங்கத்தின் வெளிப்படையான அணுகுமுறை வரவேற்கத்தக்கது, ஆனால் அது உண்மையான அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று முகைதீன் தெரிவித்தா.
நாம் ஒன்றாக அமர்ந்து இதைப் பற்றி விவாதிக்கலாம், ஏனெனில் இந்தப் பிரச்சனை அனைவரையும் உள்ளடக்கியது. மேலும் இதனால் பாதிக்கப்படப்போவது மக்கள்தான் என்று அவர் இன்று பாகோ இளைஞர் மற்றும் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற பாகோ நாடாளுமன்றத் தொகுதிக்கான ஹரி ராயா ஐடில்ஃபித்ரி திறந்த இல்ல நிகழ்வின் போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் மலாய் மொழி நாளிதழிடம் கூறினார்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வு காண அரசாங்கத்திற்கு உதவுவதற்காக, எதிர்க்கட்சி மற்றும் விவாதங்களை நடத்த விரும்பும் எந்தவொரு கட்சிகளுக்கும் கதவைத் திறந்து வைப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், முன்னாள் பிரதமரான முஹைதீன், மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஒருங்கிணைக்க, தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழுவின் (MTEN) கீழ் உள்ள நெருக்கடி மேலாண்மைப் பணிக்குழுவின் (PPPK) தலைவராக டான் ஸ்ரீ முகமது ஹசன் மரிகானின் நியமனத்தை நிராகரித்தார். இத்தகைய ஒரு முக்கியமான குழுவின் உயர் பதவியை பிரதமர் வகிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதுபோன்ற மிகவும் முக்கியமான விஷயங்களை பிரதமரே முன்னின்று நடத்த வேண்டும். இது எண்ணெய் விலை பற்றியது அல்ல, மாறாக, குறிப்பாக டீசல் விலை உயர்வால் அழுத்தத்தில் இருக்கும் மக்களின் குறைகள் பற்றியது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



