வாருங்கள் ஒன்றிணைவோம்! பாஸ் கட்சிக்கு அம்னோ அழைப்பு
- Shan Siva
- 04 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 4: வரவிருக்கும்
மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, மலாய்
அடிப்படையிலான அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் ஜொகூரில் தொடங்கப்பட
வேண்டும் என்ற பாஸ் கட்சியின் முன்மொழிவுக்குப் பதிலளிக்கும் விதமாக, மலாய்காரர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு தளமாக 'ருமா பாங்சா' (Rumah Bangsa) முன்னெடுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு ஜொகூர் அம்னோ
இளைஞர் பிரிவு, பாஸ் (PAS)
கட்சியை வலியுறுத்தியுள்ளது.
மலாய் ஒற்றுமையை
வளர்ப்பதற்கான பாஸ் கட்சியின் நோக்கத்தையும் பேராவலையும் ஜொகூர் அம்னோ இளைஞர்
பிரிவு வரவேற்பதாகவும், ஆனால் இந்த
முயற்சி வெறும் தேர்தல் உத்தியாக இல்லாமல் நேர்மையாக மேற்கொள்ளப்படும் என
நம்புவதாகவும் அதன் தலைவர் நூர் அஸ்லீன் அம்ப்ரோஸ் FMT-யிடம் தெரிவித்தார்.
ஜொகூர் மாநிலத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா
அல்லது மற்றவர்களுடன் ஒத்துழைப்பதா என்பது குறித்த பாஸ் கட்சியின் முடிவு, அந்தக் கட்சியின் நேர்மைக்கான ஒரு சோதனையாக
அமையும் என்றும் அவர் கூறினார்.
தேர்வு
முற்றிலும் பாஸ் கட்சியின் கையில்தான் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நேற்று,
PAS துணைத் தலைவர் துவான்
இப்ராஹிம் துவான் மான், ஜொகூர் மாநிலத்
தேர்தலில் PAS மற்றும் Umno
இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தார்.
தற்போது செயலிழந்துவிட்ட அவர்களின் முவாஃபாகத் நேஷனல் கூட்டணியை மீண்டும்
உயிர்ப்பிக்க இதுவே சரியான நேரம் என்றும் அவர் விவரித்தார்.
நாட்டின் இரண்டு
பெரிய மலாய்-முஸ்லிம் கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்பு தேவை என்றும், மாநிலத் தேர்தல்கள் ஒரு புதிய அரசியல்
மறுசீரமைப்பைக் கொண்டுவரக்கூடும் என்றும் துவான் இப்ராஹிம் கூறினார்.
அந்த வகையில்,
அந்த இலக்கை அடைவதற்கான ஒரு தளமாக 'ருமா பாங்சா'வை PAS கருத்தில் கொள்ள
வேண்டும் என்பதே ஜொகூர் Umno இளைஞர் பிரிவின்
பரிந்துரையாகும் என்று நூர்
அஸ்லீன் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



