கசப்புகளை மறந்து நீலமும் பச்சையும் இணையட்டும்! -ஜாஹிட் ஹமிடி

top-news

கோலாலம்பூர், அக் 28: மலாக்கா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற, கடந்தகால அரசியல் கசப்புகளை மறந்து பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பாரிசான் நேஷனல் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

மலாக்காவில் புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளதால், இரு தரப்பும் பழைய வேறுபாடுகளை மறந்து, ஒரே இலக்குடன் செயல்பட வேண்டும் எனத் துணைப் பிரதமருமான அவர் கூறினார்.

மஸ்ஜித் தானா நாடாளுமன்றத் தொகுதிக்கான பாரிசான் நேஷனல் தேர்தல் இயந்திரத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றிய அவர், முன்பு நீல நிறத்தையும் பச்சை நிறத்தையும் சார்ந்த கட்சிகளிடையே அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், தற்போது புதிய கூட்டாண்மை உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தேர்தல் பணிகளில் இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அம்னோ 18 தொகுதிகளிலும், எம்.சி.ஏ. இரண்டு தொகுதிகளிலும், ம.இ.கா. ஒரு தொகுதியிலும் களமிறங்குகின்றன.

எஞ்சிய ஏழு தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக, பாஸ் உள்ளிட்ட பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அஹமட் ஜாஹிட் தெரிவித்தார்.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 31ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவு நவம்பர் 10ஆம் தேதியும், பொதுவாக்குப்பதிவு நவம்பர் 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளன!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்