ஷா ஆலம், LRT வழித்தடத்திற்கு கூடுதலாக ஏழு ரயில் பெட்டிகள்!
- Shan Siva
- 29 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 29: ஷா ஆலம், LRT வழித்தடத்திற்கு
கூடுதலாக ஏழு ரயில் பெட்டிகளை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம்,
2028-ஆம் ஆண்டுக்குள் ரயில்
பெட்டிகளின் எண்ணிக்கை 22-லிருந்து 29-ஆக அதிகரிக்கும்.
LRT3 என்றும்
அழைக்கப்படும் இந்த வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து
வருவதால், காத்திருப்பு
நேரத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதலை
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உறுதிப்படுத்தியதாக பிரசரானா மலேசியா பெர்ஹாட்
நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல்
அதிகாரியுமான அமீர் ஹம்தான் தெரிவித்தார்.
எதிர்காலத் திறன் தேவைகளைத் தீர்மானிக்க, பயணிகள் ஏற்றும் அளவை பிரசரானா தொடர்ந்து மதிப்பீடு செய்யும் என்றும் அவர் மேலும் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



