ஏடிஸ் கொசுக்கள் ஆதிக்கத்தை எதிர்கொள்ள விழிப்புடன் இருப்பீர்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

கிள்ளான், ஜன.26-

மக்கள் மத்தியில் உயிருக்கு மருட்டல் விடுக்கும் வகையில் மனுக் குலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் ஏடிஸ் கொசுக்களின் ஆதிக்கத்தை எதிர் கொள்ள விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும் என்று மாநில பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் புவான் ஜாமாலியா ஜாமாலுடின் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அளவில் டெங்கி காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் வேளையில் ஒரு சிலர் அந்தக் காய்ச்சல் தன்மையைக் கட்டுப் படுத்த முடியாமல் இறந்தும் போகின்றனர் என்ற வருத்தமான தகவலை அவர் வெளியிட்டார்.

மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போர் தங்களது சுற்றுப் புறத்தூய்மையை அடிக்கொரு தடவை சுத்தம் செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதால் மாநில ரீதியில் டெங்கி காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

நேற்று முன்தினம் இங்கு கிள்ளான் கேஎஸ்எல் எஸ்பிளன்டி மாலில் உள்ள சிறப்பு வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றிய ஜாமாலியா மேற்கண்ட கருத்தை முன் வைத்துப் பேசினார்.

மாவட்ட அளவில் செயல்படும் அரசு சுகாதார இலாகாவில் பணியில் இருந்து வரும் கொம்பி ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்புப் பிரிவினர் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த ஏடிஸ் ஒழிப்பு மருந்து தெளிப்புப் பணிகளை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா ஏற்பாடு செய்திருந்த ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் தேர்வு செய்யப்பட்டிருந்த சிறந்த சேவையாளர்களுக்கு ஜாமாலியா பின்னர் நற்சான்றிதழ் நினைவுப் பரிசுகள் எடுத்து வழங்கி அவர்களை வாழ்த்தினார். மாநிலத்தில் செயல்படும் நகராண்மைக் கழகங்களில் இருந்து அழைக்கப்பட்டிருந்த சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *