நாங்க மோதிக்குவோம்... ஆனாலும் மடானி அரசு வலுவாக இருக்கும்! – அந்தோணி லோக்
- Shan Siva
- 19 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 19: கடந்த சில நாட்களாக டிஏபி மற்றும் அம்னோ கட்சிகளுக்கு இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டிருந்த போதிலும், மடானி அரசு வலுவாகவும் நிலையாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று டிஏபி பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் இன்று தெரிவித்துள்ளார்.
“எங்களுக்குள் கருத்து
வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் வளர்ச்சிக்கும்
மக்களின் நலனுக்காகவும், மடானி அரசு திடமாகவும் நிலையாகவும்
செயல்பட்டு வருகிறது” என்று, அவர் தனது ஃபேஸ்புக்
பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில், இன்று நாடாளுமன்றம் திறக்கப்பட்டதை ஒட்டி
எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் லோக் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தில்,
அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, பாரிசான் நேஷனல் பொதுச் செயலாளர் ஜாம்ப்ரி
அப்துல் காதிர், பக்காத்தான் ஹரப்பான் பொதுச்
செயலாளர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், மற்றும் GRS தலைவர் ஃபடில்லா யூசோஃப்
உள்ளிட்ட அமைச்சரவை சகாக்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற அம்னோ
மாநாட்டின் போது, டிஏபி மற்றும் அம்னோ
ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, இந்த கருத்தை அந்தோணி லோக் வெளியிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



