அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை தொடர்ந்து பயணிப்போம்! - ஜாஹிட்
- Shan Siva
- 13 Sep, 2026
கோலாலம்பூர், செப் 13: ஒற்றுமை அரசாங்கத்திற்குள் நிலவும் மாறுபட்ட கருத்துக்களைத் தங்கள் கட்சி மதிக்கிறது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை அதனுடன் தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அம்னோ தலைவர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.
மற்றவர்களின் மாறுபட்ட கருத்துக்களை நாம் எவ்வாறு மதிக்கிறோமோ, அதேபோல (அரசாங்கத்திற்குள் உள்ள) மாறுபட்ட கருத்துக்களையும் மதிக்க வேண்டும் என்று துணைப் பிரதமருமான ஜாஹிட், அம்னோ பொதுக்ப்கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்தார்.
மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதிலும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அம்னோ உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதில் தொழில்முறை கண்ணோட்டத்துடனேயே செயல்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
முன்னதாக அம்னோ கூட்டத்தில் பேசிய ஜாஹிட், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகியோரை மறைமுகமாகச் சாடியிருந்தார். பி.கே.ஆர் (PKR) தலைவரை விடத் தங்கள் கட்சியால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று கூறியிருந்தார்.
ஒற்றுமை அரசாங்கக் கூட்டணியிலிருந்து அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் ஆகியவற்றை வெளியேற்றுமாறும், பிரதமர் அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருமாறும் அம்னோவை விமர்சிப்பவர்களுக்கு ஜாஹிட் சவால் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



