வாக்காளர்களை வற்புறுத்தமாட்டோம்! - முகைதீன்
- Shan Siva
- 30 Jun, 2026
பாகோ, ஜூன் 30: ஜொகூர் மாநிலத் தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் போட்டியிடாத தொகுதிகளில், எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் வாக்களிக்குமாறு பெர்சாத்து தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தாது என்று அதன் தலைவர் முகைதீன் யாசின் கூறினார்.
எந்தக் கட்சிக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள் என்பதை உறுப்பினர்களும் ஆதரவாளர்களுமே முடிவு செய்ய விட்டுவிடுவதாக முகைதீன் கூறினார்.
தாம் அவர்களிடம் அம்டாப்பிற்கு வாக்களிக்குமாறு கூற மாட்டேன் என்று அவர் கூறினார். ஒற்றுமை அரசாங்கத்தில் ஒரு கூட்டணிக் கட்சியாக அம்னோவுக்கும் டிஏபி-க்கும் இடையிலான உறவைக் கேலியாக சித்தரிக்கும் சொல் அம் டாப் என்பது குறிப்பிடத்தக்கது.
புக்கிட் கெப்போங்கிற்கான கூட்டணியின் வேட்பாளரான டாக்டர் சஹ்ருதீன் ஜமாலுக்காகப் பிரச்சாரத்தின் போது முன்னாள் பிஎன் தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
வாக்காளர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்களிடையே எந்தக் குழப்பமும் ஏற்படாமல் தடுப்பதற்காகவே பெர்சத்து இத்தகைய அணுகுமுறையைக் கையாள முடிவு செய்ததாக முகைதீன் கூறினார்.
முடிந்தவரை அதிக வாக்குகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, எனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் கூறி நாங்கள் அவர்களைக் குழப்ப மாட்டோம் என்று அவர் கூறினார்.
பெரிகாத்தான் போட்டியிடாத மாநிலத் தொகுதிகளில் அம்னோ அல்லது பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பாஸ் கட்சி அதன் அனைத்து உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கேட்டுக்கொண்டதை அடுத்து முகைதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



