அவதூறுகளைப் பொருட்படுத்தமாட்டோம்! – அமினுதீன் ஹாரூன்
- Shan Siva
- 23 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 23: நெகிரி செம்பிலான் பக்காத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமினுதீன் ஹரூன், கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய 200 சதவீதம் உழைப்பேன் என்று கூறியுள்ளார்.
மாநில அரசின்
கட்டுப்பாட்டை கூட்டணி வெற்றிகரமாகத் தக்க வைத்துக் கொண்டால், அவரை முதலமைச்சர் வேட்பாளராக PH தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வர்
இப்ராஹிம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் இக்கருத்தை முன்வைத்துள்ளார்.
PH-இன் லிங்கி
வேட்பாளரான அமினுதீன், தேர்தல்
இயந்திரங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த அறிவிப்பு ஏற்கனவே பலமுறை
வெளியிடப்பட்டுவிட்டதால், இது புதியதல்ல
என்று கூறினார்.
இந்த முறை பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர்கள் வலுவான போட்டியை
வழங்கக்கூடியவர்கள் என்று கருதுவதால், தொடர்ந்து முன்னேறிச் செல்வோம் என்று கூறினார்.
இதற்கிடையில்,
நெகிரி செம்பிலான் தேர்தல் பிரச்சாரத்தின்
எஞ்சிய காலத்தில், அரசியல்
தாக்குதல்களையோ அல்லது அவதூறானதாகக் கருதும் குற்றச்சாட்டுகளையோ பக்காத்தான் ஹரப்பான்
கட்சி பொருட்படுத்தாது என்றும், அதற்குப் பதிலாக,
தனது தேர்தல் அறிக்கை மற்றும் கொள்கைத்
திட்டங்களை மக்களுக்கு விளக்குவதில் கவனம் செலுத்தும் என்றும் அமினுதீன் கூறினார்.
மேலும், தான் ஒரு "டிஏபி கைப்பாவை" என்ற
குற்றச்சாட்டுகள் உட்பட, தன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு தாக்குதல்கள்,
எந்தவித ஆதாரமும் இல்லாத வெறும் அனுமானங்களே
என்று அவர் கூறினார்.
அந்தத்
தாக்குதல்கள் எங்களைப் பாதிக்காது. நாங்கள் மக்களுக்கு என்ன வழங்குகிறோம் என்பது
ஏற்கனவே எங்கள் தேர்தல் அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது என்றார் அவர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



