RM350 கட்டணத்தில் 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் புதிய பாஸ்போர்ட்
- Shan Siva
- 04 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 4: நேற்று வெளியிடப்பட்ட அரசாங்க அரசிதழின் தகவலின்படி, புதிய மலேசிய கடவுச்சீட்டுகள் RM350 கட்டணத்தில் 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு RM175 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் (PWD) அட்டை வைத்திருப்பவர்களுக்கு கடவுச்சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
தற்போது, மலேசியர்கள் ஐந்து வருடச் செல்லுபடியாகும் கடவுச்சீட்டிற்கு RM200-ம், மூத்த குடிமக்கள் RM100-ம் கட்டணம் செலுத்துகின்றனர்.
சேதமடைந்த அல்லது தொலைந்துபோன கடவுச்சீட்டுகளை மாற்றுவதற்கான கட்டண விவரமும் அந்த அரசிதழில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில், 13 முதல் 59 வயதுக்குட்பட்ட குடிமக்களுக்கு முதல் முறை மாற்றுவதற்கான கட்டணம் RM550 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்பு RM400 ஆக இருந்தது.
இரண்டாவது முறை மாற்றுவதற்கு RM850-ம், அதைத் தொடர்ந்த மாற்றங்களுக்கு RM1,350-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கு, முதல் முறை மாற்றுவதற்கு RM375-ம், இரண்டாவது முறைக்கு RM675-ம், அதைத் தொடர்ந்த மாற்றங்களுக்கு RM1,175-ம் கட்டணமாகும்.
மாற்றுத்திறனாளி அட்டைதாரர்களுக்கு முதல் மாற்றத்திற்கு RM200, இரண்டாவது மாற்றத்திற்கு RM500 மற்றும் அடுத்தடுத்த மாற்றங்களுக்கு RM1,000 கட்டணம் வசூலிக்கப்படும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



