பாலியல் குற்றச்சாட்டு! பிரபல சாமியாருக்கு 24 ஆண்டுகள் சிறை; 2 பிரம்படி தண்டனை!

top-news

பெட்டாலிங் ஜெயா: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதின்ம வயது இளைஞனை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பிரபல சாமியார் அஸ்மான் சியா அலியாஸுக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கிள்ளான் அமர்வு நீதிமன்றம், 17 வயது இளைஞன் மீது உடல்ரீதியான பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, பிப்ரவரி 20 ஆம் தேதி நள்ளிரவில் கிள்ளான், கம்போங் சுங்கை ஊடாங்கில் உள்ள தங்கும் விடுதியில் உடல்ரீதியான பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ் அஸ்மான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்