அடுத்த மாதம் கிர்கிஸ்தான், தைவான் ஆட்டத்தில் பைசாலின் பங்கேற்பு சந்தேகமே!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 6-
 அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டு / ஆசியக் கோப்பை 2027ஆம் ஆண்டு தகுதிச் சுற்று ஆட்டங்களில் பைசல் ஹலிம் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
பேரங்காடியில் அடையாளம் தெரியாத நபரால் நேற்று  பைசால் மீது எரிதிராவகம் வீசப்பட்டதில், உடலின் பின்பகுதியில் பலத்த காயம் அடைந்ததால், அவருக்கு நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது. இந்நிலையில், ஜூன் 6ஆம் தேதி கிர்கிஸ்தானுக்கு எதிராகவும் ஜூன் 11ஆம் தேதி தைவானுக்கு எதிராகவும் அவர் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று  ஏற்பட்ட சம்பவத்திலிருந்து பைசால் விரைவில் மீண்டு  வர , சிறிது காலத்திற்கு கால்பந்தை மறந்து, நன்றாக ஓய்வெடுப்பதே சிறந்தது என்று மலேசிய கால்பந்து சங்கத்தின் (எஃப்ஏஎம்) தலைவர் டத்தோ ஹமிடின் முகமட் அமின் கூறினார். 
அதுமட்டுமல்லாமல் கடந்த வாரத்தில்தான் மற்றொரு தேசிய வீரரான அக்யார் ரஷீத் கொள்ளையடிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவமும் தேசிய அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் விரைவில் இருவரும் குணமடைந்து மீண்டும் கால்பந்து துறைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *