போலி PASSPORT தயாரிக்கும் கும்பல் கைது! – 700 பாஸ்போர்ட்கள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 23,

போலி கடவுச்சீட்டுகளைத் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 2 BANGLADESH ஆடவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Dato’ Zakaria Shaaban தெரிவித்தார். கடந்த மாதம் போலி கடவுச் சீட்டுகளுடன் 3 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து பெறப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் தலைநகர் Taman Wahyu வணிக வளாகத்தில் சோதனையை மேற்கொண்டதாக Dato’ Zakaria Shaaban தெரிவித்தார். 29 வயது 32 வயதுள்ள இரு வெளிநாட்டினர்கள் 700 கடவுச்சீட்டுகளுடன் அந்த வணிக வளாகத்தில் இருந்த போது கைது செய்யப்பட்டதாக Dato’ Zakaria Shaaban தெரிவித்தார். 

அவர்களிடமிருந்து 700 கடவுச் சீட்டுகள் உட்பட அரசாங்கத்தின் முக்கிய ஆவணங்களும் முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக Dato’ Zakaria Shaaban தெரிவித்தார். அவர்களிடமிருந்து உயர்தர அச்சு இயந்திரமும் RM 200,000 ரிங்கிட் மதிப்பிலான e-wallet தொகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக Dato’ Zakaria Shaaban தெரிவித்தார். இந்த கும்பல் கடந்த 3 ஆண்டுகளாக, மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டினர்களுக்குப் போலி கடவுச்சீட்டுகள், போலி வேலை ஆவணங்கள் ஆகியவற்றை வழங்க RM 100 ரிங்கிட்டிலிருந்து RM1000 ரிங்கிட் வரையிலும் வசூலித்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *