ஈரான் போர் எதிரொலி; சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி கடும் சரிவு

top-news
FREE WEBSITE AD

ஈரான் போர் காரணமாக உருவான உலகளாவிய பதற்றத்தின் தாக்கமாக சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி கணிசமாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக சந்தைகளில் ஏற்பட்ட நிச்சயமற்ற நிலை, எரிபொருள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததன் காரணமாக சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 21.8 சதவீதமாக இருந்த சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி, மார்ச் மாதத்தில் வெறும் 2.5 சதவீதமாக மட்டுமே பதிவாகியுள்ளது. இது கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகப் பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் போர் சூழ்நிலை காரணமாக சர்வதேச வர்த்தக பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உலக நாடுகளில் பொருளாதார அச்சமும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக பல நாடுகள் இறக்குமதியை குறைத்து வருவதால் சீன உற்பத்திப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்திருப்பது உற்பத்தி செலவுகளையும் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரித்துள்ளது. இதனால் சீன தொழிற்சாலைகளின் லாப விகிதமும் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய விநியோகச் சங்கிலி மீண்டும் பாதிக்கப்படத் தொடங்கியிருப்பதும் கவலைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *