திமுக மீது பொய்யான குற்றச்சாட்டு – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 7 –

தமிழக சட்டசபையில் திமுக மீது முதலமைச்சர் விஜய் ஆதாரமற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய ஆட்சியின் 114 நாட்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக தரப்பில் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால் முதலமைச்சர் தனது 45 நிமிட பதிலுரையில் தங்களது கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

முதலமைச்சர் விஜய் திமுக ஆட்சிக்காலம் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, பதிலளிக்க வாய்ப்பு கோரியதாகவும், அதனைத் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்ததாகவும் உதயநிதி கூறினார்.

மேலும், முதலமைச்சரின் உரையில் ஆக்கப்பூர்வமான பதில்களைவிட சினிமா வசனங்கள் மற்றும் ‘பஞ்ச்’ வசனங்களே அதிகமாக இருந்ததாக அவர் விமர்சித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *