ஹரிராயா பண்டிகைக்கான உணவுப் பொருள் தேவை போதுமானது – FAMA உறுதி
- Surendran Sumdraraj
- 16 Mar, 2026
செலாயாங், மார்ச் 16-
வரவிருக்கும் ஹரிராயா பண்டிகையை முன்னிட்டு தேவையான உணவுப் பொருட்களின் இருப்பு தற்போது போதுமான அளவில் இருப்பதாக கூட்டாட்சி விவசாய சந்தைப்படுத்தல் வாரியம் (FAMA) உறுதியளித்துள்ளது.
FAMA தலைவர் அமினுடின் ஸுல்கிப்லி கூறுகையில், நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் வழங்கல் மட்டுமல்லாமல் அவற்றின் விலையும் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமைச்சு முன்பு வழங்கிய விளக்கத்துடன் FAMAவின் நிலைப்பாடும் ஒரே மாதிரியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். ஹரிராயா பண்டிகையை முன்னிட்டு உணவுப் பொருட்களின் வழங்கலும் விலையும் நிலையான நிலையில் இருக்கும் என நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் உலகின் சில பகுதிகளில் போர் நிலைமை நிலவினாலும், அது நாட்டின் உணவுப் பொருட்கள் வழங்கலுக்கு இதுவரை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் விளக்கினார்.
வரவிருக்கும் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



