ஒரு தந்தைக்கு ஈடாகுமா இப்பிறவி சிப்பாங் வட்டாரத்தில் தந்தையர் தினக் கொண்டாட்டம்

top-news
FREE WEBSITE AD

தி.கிரிஷன்

சிப்பாங், ஜூன் 23,

சிப்பாங் வட்டாரத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு, தந்தையர்களைக் கௌரவிக்கும் வகையில் "தந்தையர் தினக் கொண்டாட்டம் - இன்னிசையுடன் கூடிய விருந்தோம்பல்" நிகழ்ச்சி நேற்று (ஜூன் 20, சனிக்கிழமை) இரவு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இவ்விழாவை சிப்பாங் நகராண்மை கழகம், சிப்பாங் தமிழ்ப்பள்ளி வாரிய குழு, சிப்பாங் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், சிலாங்கூர் இந்தியச் சமூகம், சிப்பாங் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய பைரவர் குழுவினர் இணைந்து மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். அவர்களுள் முக்கியமாக திரு. பெ. சிவக்குமார் (சிப்பாங் நகராண்மை கழக உறுப்பினர், டத்தோ ஆ. சிவக்குமார் (சிலாங்கூர் மாநில இந்திய சமூகத் தலைவர்) , திரு. ரா. பூபாலன், (சிப்பாங் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்),திரு. எ. ரமேஸ்(RD TECH உரிமையாளர்), Mr Chong Kerry Logistics ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நேற்று இரவு 7.31 மணி முதல் 11.00 மணி வரை தேசிய வகை சிப்பாங் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தந்தையர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுவையான விருந்து உபசரிக்கப்பட்டது.

இதனுடன், விழாவை மேலும் உற்சாகப்படுத்த பிரபல பாடகர் TMS சித்திரன், பாடகி ரோகினி பெருமாள், MGR ரவிச்சந்திரன், Jayalalitha தெய்வயானி அவர்களின் காதுக்கினிய பாடல்களுடன் கூடிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ரமேஷ் என்கிற குப்புசாமி வளர்ந்து  வரும் பாடகர், அவர்களுக்கும் பாடல் பாட சிறப்பான அங்கம் வழங்கப்பட்டது. விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாக, கலந்துகொண்ட அன்பான தந்தையர்களுக்குச் சிறப்பான "அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகள்" , மூத்த தந்தையருக்குச் சிறப்பு அன்பளிப்பும வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியை மேலும் மெருக்கூட்டும் வகையில் நமக்காக பல்லூடக அங்கத்தை வழிநடத்தி சிறப்பான பாடல்களை  Pamban Guyzz வழங்கியுள்ளார்.

"கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு, கடவுளே கிடைத்தார் வரமாக அப்பா" என்ற நெறிக்கட்டு வாசகத்துடன், குடும்பத்திற்காகத் தங்களை அர்ப்பணிக்கும் தந்தையர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்நிகழ்ச்சி உணர்வுப்பூர்வமாக அரங்கேறியது. திரளான பொதுமக்களும் குடும்பத்தினரும் கலந்துகொண்ட இந்தத் தந்தையர் தினக் கொண்டாட்டம் சிப்பாங் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *