DAP-தான் காரணம் என்றால், அடுத்த தேர்தலில் முக்கிய முடிவு எடுக்க வேண்டியிருக்கும்! - அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்
- Shan Siva
- 24 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 24: அம்னோ கட்சிக்கு மலாய் வாக்காளர்கள் வழங்கும் ஆதரவும், DAP மீதான அவர்களின் மனநிலையும் குறித்து அறிய, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று அம்னோ தலைவர்களில் ஒருவரான அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசின் ஒரு பகுதியாக அம்னோவும் DAP-யும் இணைந்து செயல்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும்,
இந்தக் கூட்டணியை மலாய் மக்களும், அம்னோ
அடித்தட்டு ஆதரவாளர்களும் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர்
கூறினார்.
அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான மஸ்லான்,
இத்தகைய கருத்துக் கணிப்புகள், அம்னோ–DAP
உறவின் நிலையை கட்சிக்குத் தெளிவாக புரிந்துகொள்ள உதவும்
என்றார்.
மலாய் மக்கள் இன்னும் DAP-ஐ விரும்பவில்லை. ஆனால் ஒற்றுமை அரசை அவர்கள்
நிராகரிக்கவில்லை. எனவே, அரசின் நடவடிக்கைகள் மூலம் அந்த விரோதத்தைக் குறைப்பது
சாத்தியமற்றது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், DAP உடன்
கூட்டணி வைத்திருப்பதாலேயே மலாய் மக்கள் அம்னோவைத் தொடர்ந்து நிராகரித்தால்,
அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு முன் கட்சி ஒரு முக்கிய முடிவை
எடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் FMT-க்கு
தெரிவித்தார்.
மாறிவரும் அரசியல் சூழலில், வாக்காளர்களை ஈர்ப்பதில் பொதுப் பார்வை (optics)
முக்கியக் காரியமாக மாறி வருவதால், இத்தகைய
கருத்துக் கணிப்புகள் மேலும் அவசியம் என்றும் அவர் கூறினார்.
இந்த மனநிலைகளைச் சரியாக மதிப்பிடத்
தவறினால், கட்சி பாதிக்கப்படும் என்பதற்கு
சமீபத்திய சபா மாநிலத் தேர்தலே உதாரணம் என்றும், அங்கு
நிலவும் மக்களின் மனநிலையைப் படிக்கத் தவறியதே அம்னோவின் பின்னடைவுக்குக் காரணம்
என்றும் அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



