பள்ளி பிரச்னை என்றால் உட்கார்ந்து பேசுங்க... டிக்டாக்கில் பேசாதீங்க! - வை பி குணராஜ்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான்,  ஜூன் 18: பள்ளிக்கூட பிரச்னையை உட்கார்ந்து பேசுங்கள். உண்மை தெரியாமல் டிக்டாக்கில் பேசி களங்கம் செய்யாதீர்கள் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் வைபி குணராஜ் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிள்ளான் ஹைலேண்ட்ஸ் தோட்டத் த்மிழ்ப்பள்ளியின் முன்புறம் இருக்கு இடம் தொடர்பாக  வெளியான வீடியோ குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

பள்ளிக்கு வரும் பெற்றோர்களுக்கு பார்க்கிங் ஒரு பிரச்னையாக இருந்து வருவதால், எதிரில் இருக்கும் டி என் பி க்கு சொந்தமான இடத்தை பார்க்கிங் வசதிக்காக ஒதுக்க வேண்டும்  என  பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அதற்கான ஏற்பாடுகளை  முறையாகச் செய்து வருகிறோம். இந்த நேரத்தில் இது குறித்த உண்மை தெரியாமல் டத்தோ கலைவாணர் டிக்டாக்கில் பேசியிருப்பது ஏற்புடையது அல்ல என்று வைபி குணராஜ் தெரிவித்தார்.

பள்ளி பிரச்னை என்றால் சமூக அக்கறை உள்ளவர்கள் அது தொட்ரபக சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசி உண்மை நிலையை அறிந்திருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு மீடியா முன் பேசுவது நல்ல செயல் அல்ல என அவர் கூறினார்.

முன்னதாக சம்பந்தப்பட்ட இடத்தில் நர்சரி வைப்பதற்காக ஓர் இளம்பெண் அந்த இடத்தை சுத்தம் செய்தத்தாகவும், அதற்கு அப்பெண்ணை அலைபேசியில் அழைத்து  சிலர் மிரட்டியதாகவும் டத்தோ கலைவாணர் சம்பந்தப்பட்ட பெண்ணுடன் ஊடக சந்திப்பை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *